Fx16TV Logo

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு

NEWS / இந்தியா, வணிகம், Fx16News,

வங்கிகள், இறக்குமதியாளர்கள் மட்டுமின்றி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகளவில் வாங்கி வருகின்றன.  இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே ரூபாய் மதிப்பு 28 காசுகள் வீழ்ச்சி அடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68 ரூபாய் 89 காசுகளாக குறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21 காசுகள் சரிந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69 ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 49 காசுகள் சரிந்து 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Fx16TV Logo