Fx16TV Logo

யுவன் எனும் மாயோன்

NEWS / தமிழ்நாடு, இந்தியா, சினிமா, TOP NEWS, Fx16News, Exclusive,

 

Image result for yuvan childhood photos

1996 -ம் வருடம், ஏதோ ஒரு வேலையாக, இசைஞானி இளையராஜா வீட்டுக்குச் சென்றிருந்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, அங்கே, கீபோர்டில் விளையாடிக்கொண்டிருந்த 16 வயது சிறுவனின் திறமையைக் கண்டு வியந்து, திரைத்துறைக்குக் கொண்டு வருகிறார். உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இசையமைப்பாளரின் மகன், திரையுலகிற்கு வருவது எப்படியாயினும் நடந்திருக்கும். ஆனால் அந்தச் சிறுவன், திரையுலகில் தன் தந்தையால் புகுத்தப்பட்டவன் அல்ல. 16 வயதினிலேயே, தன் திறமையால் உள்ளே கொண்டுவரப்பட்டவன் என்று நிரூபிக்க, அவனுக்கு வெகு காலம் தேவைப்படவில்லை.

 

Related image

முதல் படம் அரவிந்தன் 1997 – ல் வெளியாகிறது. படம் பெரியதாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்தச் சிறுவனின் இசையில், வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி, மகாநதி ஷோபனா குரல்களில் உருவான ஈர நிலா பாடல், இருபது வருடங்களுக்குப் பிறகு, இப்போது கேட்டாலும், மனதை ஈரமாக்கிவிட்டுச் செல்லத் தவறுவதில்லை.

 

Image result for yuvan and venkatprabhu

 

அடுத்தடுத்த படங்கள் சரியான வெற்றியைப் பெறாத நிலையில், 1999 ம் ஆண்டு, இயக்குனர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் விமர்சகர்கள் கொண்டாட, அதன் பிறகு, அந்தச் சிறுவன் திரும்பிப்பார்க்க நேரமில்லாது ஓட ஆரம்பித்தான். ஒரு புறம், அவனது தந்தை இசை ஞானியாக, தென்றலாக வருடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் ஏஆர். ரகுமான் புயலாய் மிரட்டிக்கொண்டிருக்க, இசைஞானி இளையராஜாவின் இசையை புரிந்து கொள்ளும் வயதடையாதவர்களும், ஏஆர் ரகுமான் இசையை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டாட முடியாதவர்களுமான ஒரு பெரிய இளைஞர் கூட்டத்திற்கானவனாக மாறினான். இன்றும் அந்த இளைஞர்களின் இசை இளவரசன் அவன்தான்.

 

 

 

யுவன். தமிழக இளைஞர்களின் ஆதர்ஸ நாயகன். தொழில் நுட்பம் வளர வளர, இளைஞர்களின் அன்பு, காதல், பாசம், நட்பு போன்ற தேவைகளின் அளவுகோலும் மாறத் தொடங்கியது. அந்த தாகத்தைத் தணித்த அருமருந்து யுவனின் இசை. அவர்களைப் பொறுத்தவரை, யுவன் ஒரு தேவதூதன். காதலிக்கும்போது உருவாகும் துள்ளல் மனநிலைக்கு, இது காதலா முதல் காதலா, தேவதையைக் கண்டேன் கொண்டேன் போன்ற மருந்துகள் அவரிடமிருந்தது. காதல் தோல்விக்கு, போகாதே.. போகாதே, நீ பிரிந்தால் நான் இறப்பேன் என வாய்விட்டு அழ முடிந்தது. அம்மாவின் பாசத்திற்கு ஒரு ஆராரிராரோ, தந்தையின் அன்புக்கு ஒரு ஆனந்த யாழ் என அவர் விரல் இசைந்தது. தன் பாடல்களால், அவர் தொடாத மனதே இல்லை எனும் அளவுக்கு  யுவன் அங்கிங்கெனாதபடி எங்கும் தன் இசையால் நிறைந்திருக்கிறார்.

 

 

 

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் சிலரான செல்வராகவன், ஏஆர் முருகதாஸ், ராம், அமீர் ஆகியோரின் முதல் படங்களின் வெற்றிக்கு, யுவனின் இசையும் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இளைய நடிகர்களில், தனுஷ், ஆர்யா, கார்த்தி, விஷால், அதர்வா போன்றோரும், யுவன் இசைத்த திரைப்படங்களில்  அறிமுகமானவர்களே.

 

 

யுவன், இயக்குனர்களின் நண்பன். செல்வராகவன், ராம், விஷ்ணுவர்த்தன், வெங்கட்பிரபு, சிம்பு போன்ற இயக்குனர்கள், யுவனின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தவர்கள். தங்கள் படத்தின் வெற்றிக்கு, யுவனின் இசை எத்தனை முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். தங்கள் தாகத்திற்கான அமுத சுரபி யுவன் என்பதை அறிந்தவர்கள். இவர்களுடன் யுவன் இணைந்தால், இளைஞர்களிடையே, அந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எகிறுவதில் ஆச்சரியம் இல்லை. குறிப்பாக, இயக்குனர் செல்வராகவன் - யுவன் கூட்டணி, வாராது வந்த மாமணி.

 

 

பாடலாசிரியர் பழனிபாரதி தொடங்கி கவிஞர் வாலி, வைரமுத்து முதலான ஜாம்பவான்களுடன் யுவன் பணிபுரிந்திருந்தாலும், யுவன் – நா.முத்துக்குமார் இணை, காலத்தால் அழியாத கல்வெட்டு. துரதிருஷ்டவசமாக, வெகுகாலம் அவர்கள் இணைந்து பயணிக்கமுடியவில்லை என்றாலும், யுவனின் இசைக் காலம் முழுவதும் நா. முத்துக்குமார் வாழ்ந்துகொண்டிருப்பார்.

 

Image result for yuvan singing songs

 

அத்தனையும் சொல்லிவிட்டு, யுவனின் குரலைப் பற்றிப் பேசாமல் போனால் அந்த இசை தேவதை எனைத் தண்டித்துவிடாதா. ஐம்பதுக்கும் அதிகமான பாடல்கள் யுவனின் குரலில். தன் இசையில் மட்டுமல்ல, சாய்ந்து சாய்ந்து என இசைஞானி இசையில் தாலாட்டி, கடல் ராசா நான் என ஏஆர் ரகுமான் இசையில் முறுக்கேற்றி, முத்தம் கொடுத்த மாயக்காரி என ஜி.வி. ப்ரகாஷ் இசையில் துள்ள வைத்து, டி. இமான், குறளரசன் இசை வரைக்கும் யுவனின் வீச்சு அதிகம். யுவனின் இசை உயிரைத் தீண்டும் என்றால், ஆழ்மனதில் இருந்து அந்த உயிரை உருவி எடுத்துவிடும் யுவன் எனும் மாயோனின் குரல்.

 

Image result for yuvan singing songs

 

கிட்டத்தட்ட இருபதாண்டு காலமாக இசையில் கோலோச்சிக் கொண்டிருக்கும்  யுவனுக்கு,  சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை, 125 ம் திரைப்படம். இன்னும் பல நூறு படங்கள் யுவனின் இசையால் முழுமை பெறவேண்டும். யுவன் எனும் இசை தேவதையால், இளைஞர்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டும்.

Related image

 

 

Image result for yuvan and ar rahman

 

Image result for yuvan and gv prakash

 

Image result for yuvan and anirudh

 

 

இசையின் இளவரசன் யுவனைப் பற்றி எழுத ஆரம்பித்தால், அதற்கு ஒரு முடிவே இருக்காது. யுவனது பாடல் ஒன்றின் வரிகளில் எளிதாக சொல்வதானால்,

 

 

“சிரிக்கின்ற போதிலும், அழுகின்ற போதிலும், வழித்துணை போலவே, யுவன் இசையுடன் தோன்றவேண்டும்.”

 

Image may contain: 1 person

Yes. Yuvan should be there for us.

 

கட்டுரையாளர் எஸ். வெங்கடேஷ், யுவனின் அதி தீவிர ரசிகர். கும்பகோணத்தைச் சேர்ந்த 25 வயதான இவர், சென்னையில் விளம்பரத் துறையில் வேலை செய்துவருகிறார். 

அவரது முகநூல் பக்கம் : https://www.facebook.com/venki.rko.12

Fx16TV Logo