Fx16TV Logo

கார்த்திகை மாதத்திற்கு தயாராகும் சபரிமலை

NEWS / இந்தியா, Exclusive, ஆன்மிகம்,

அண்மையில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பலமான வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகின. சபரிமலை ஐயப்பன் கோவிலும், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவில் அடிவாரத்தில் ஓடும் பம்பை ஆறு வரலாறு காணாத வெள்ளத்தால் கரைபுரண்டோடியது. இதனால், கடந்த ஆடி மாத தரிசனம் தடைபட்டது. 

 

 

இந்நிலையில், புரட்டாசி மாத தரிசனத்திற்கு, பக்தர்கள் கடந்த ஞாயிறு முதல்  அனுமதிக்கப்பட்டனர். வருடம்தோறும், கார்த்திகை மாதம், சபரிமலையில் பெரும் திரளாக பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது இயல்பு. வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதி, கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதனை அடுத்து, சபரிமலை கோவிலும், பாம்பை நதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் விரைவாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கார்த்திகை மாத பக்தர்கள் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக, புனரமைப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

 

 

Fx16TV Logo