Fx16TV Logo

மத்திய அரசு மருத்துவமனையில் தனியார் சேவையா ? : கனிமொழி எம்.பி கேள்வி

NEWS / தமிழ்நாடு, இந்தியா, TOP NEWS, District,

மத்திய அரசு மருத்துவமனைகளில் தனியார் சேவை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் பதில் அளித்துள்ளார். 

நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்று வந்த கூட்டத் தொடரில் திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மத்திய அரசு மருத்துவமனைகளில் தனியார் சேவை செய்யப்படுகிறதா ? என கேள்வி எழுப்பினார். அதாவது, அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில துறைகளில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா ? அப்படி திட்டம் இருக்கிறதென்றால் இந்த கொள்கை முடிவெடிப்பின் பின்னால் இருக்க கூடிய காரணம் என்ன ? என்றார். இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில், சுகாதாரத் துறை இப்போது மாநிலங்களின் வசம் இருக்கிறது. மாநிலங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுவதில்லை.

அதே நேரம், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை, டாக்டர். ஆர்.எம்.எல் லேடி ஹெர்டிங் மருத்துவக் கல்லூரி, அசோசியேட்டட மருத்துவமனை ஆகிய மத்திய அரசின் மருத்துவமனைகளில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார். 

Fx16TV Logo