Fx16TV Logo

விராட்- அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!

NEWS / இந்தியா, விளையாட்டு, சினிமா, TRENDING, TOP NEWS, Fx16News, Gallery,

கடந்த 11ம் தேதி விராட்- அனுஷ்கா திருமணம் இத்தாலியில், நெருங்கிய உறவினர்களுக்கு முன்னிலையில் நடைபெற்றது. இரண்டு மிகப்பெரிய பிரபலங்கள் ஜோடியின் திருமணம் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

புதுமண தம்பதிகளான விராட் கோலி- அனுஷ்கா சர்மா.திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் டிப்ளோமாட்டிக் என்க்ளேவ் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நேற்றிரவு நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றார்.

முதல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், மும்பையில் திரை பிரபலன்களுக்காக வரும் 26ம் தேதி மற்றொரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான வேலைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

Fx16TV Logo