Fx16TV Logo

மாநில அளவிலான சீனியர்களுக்கான தடகள போட்டிகள்

NEWS / தமிழ்நாடு, விளையாட்டு, Fx16News,

நெல்லையில் 91வது மாநில அளவிலான சீனியர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 1000 ற்கும் மேற்பட்ட வீரா் வீராங்கணைகள் பங்கேற்றனா்

நெல்லை பாளையங்கோட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் ஏ.விகே கல்வி குழுமத்தின் சார்பில் 91 வது மாநில அளவிலான சீனியா்களுக்கான தடகள் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம் தடை ஓட்டம்  நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல் ஈட்டி எரிதல் என 22 தடகள போட்டிகள் நடைபெற்றது,

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி கோவை சென்னை மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 1000ற்கும் அதிகமான விளையாட்டு விரா் வீராங்களை கலந்து கொண்டனா்.

ஆண்கள் பெண்களுக்கு என தனித்து தனியாக நடைபெற்ற போட்டிகளில்  வெற்றி பெறும் வீரா் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது மேலும் இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா் விராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் நெல்லை மாவட்ட தடகளச் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மேற்கொண்டனா்

Fx16TV Logo