Fx16TV Logo

உஷா மரணத்துக்கு காரணமான டிராபிக் போலிஸ் காமராஜுக்கு ஜாமீன்

NEWS / தமிழ்நாடு, Fx16News,

திருச்சி போக்குவரத்துக்காவல் ஆய்வாளர் காமராஜூக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 7ம் தேதி உஷா ராஜா தம்பதியர் சென்ற வண்டியை காமராஜ் துரத்தி எட்டி உதைத்தார். இதனால் கீழே விழுந்த உஷா தலையில் அடிபட்டு இறந்தார்.

விபத்துக்கு காரணமான காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் வழங்கக் கோரி காமராஜ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உஷாவின் மரணத்திற்கு காரணம் நான் இல்லை. வாகன விபத்துக்கு வண்டிக்கு முன்னாள் ஏற்றிச் சென்ற கிரைண்டர் தான் காரணம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என காமராஜ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜூக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Fx16TV Logo