Fx16TV Logo

காவேரி வாரியம் : விவசாயிகள் இரயில் மறியல்

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, Fx16News, District,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள், சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ரெயில் நிறுத்தப்பட்டது

Fx16TV Logo