Fx16TV Logo

ஜெ., பிறந்தநாள் விழா: குமரி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்குவார் என தகவல்

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளதாக தினகரன் அணி கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா அவர்கள் தனது பிறந்தநாளில் ஏழை, எளியோர்க்கு உதவிட நமக்கு எப்போதும் அன்பு கட்டளையிடுவார்கள். ஜெயலலிதா அவர்கள் காட்டிய இந்த நற்பாதையில், நம்மை வழி நடத்தும் பொதுச்செயலாளர் சசிகலாவின் வழிகாட்டுதலின் படி வரும் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் மாலை 5 மணியளவில் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் வழங்கி, சிறப்புரையாற்ற உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fx16TV Logo