Fx16TV Logo

புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை எதிரொலி - போலீஸ் அதிரடி

NEWS / தமிழ்நாடு, TOP NEWS,

தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மத்தியில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கடந்த சில தினங்களாக அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் புழல் சிறையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 18 டிவி, 3 ரேடியோ, கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே நேற்று, கோவை, சேலம், கடலூர் சிறைகளில் அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Fx16TV Logo