Fx16TV Logo

குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு

NEWS / தமிழ்நாடு, Fx16News, District,

நெல்லையில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியால்  பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால்   மக்களை பாதிப்பு ஏற்படதா வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சுமார் ஆறு கோடி மதிப்பில் 37 இடங்களில் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழுஉரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தியாகராஜநகர் மக்கள் குடியிருப்பு பகுதி என மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் இடங்களிலேயே அமைக்கபட்டு வருகிறது. ஆனால் இந்த இடங்களில் என்ன பணிகள் நடைபெறுகிறது என எவ்வித தகவல் பலகையும் அமைக்கபடவில்லை.

மேலும் உரம் தயாரிக்கும் பணி எவ்வாறு நடைபெறும் என்று தெரியாத காரணத்தால் இந்த பணியினை மக்கள் பயன்பாடு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து அந்த பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, தியாகராஜநகர் பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உரம் தயாரிக்கும் போது குப்பைகள் மக்கும் வரை அதில் கொசுகள் உற்பத்தியாகும் இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே இதனை செயல்படுத்த வேண்டும், மேலும் இந்தப் பகுதி குழந்தைகள் விளையாடும் பகுதி என அனுமதி வழங்கபட்டுள்ளது.

நீதி மன்றமே எந்த பயன்பாடிற்காக அனுமதி வழங்கபட்டுள்ளதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் மாநகராட்சியே விதியை மீறி செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினர். மேலும் வீடுகளில் இருந்து போடப்படும் குப்பைத் தொட்டிகளை பராமறிப்பு சரியில்லாத நிலையில் இது போன்ற திட்டம் குடியிருப்புக்குகள் இல்லாத இடங்களில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

Fx16TV Logo