Fx16TV Logo

மயிலாடுதுறையில் ராமர் படத்திற்கு அவமதிப்பு: 14 பேருக்கு சிறை

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

மயிலாடுதுறையில் ராமர் படத்தை அவமதித்ததாக கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்ட 14 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியில் பெரியார் சிலை உடைப்பினை கண்டித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பலர் கலந்துக்கொண்டனர். அப்போது ராமர் படத்தை சிலர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிபதி செல்லப்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 14 பேரும், திருச்சி மத்திய சிறையில் 15 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

Fx16TV Logo