Fx16TV Logo

கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி

NEWS / தமிழ்நாடு, WEATHER,

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழை, கொடைக்கானலின் முக்கிய நீராதரமான தலைமைக் குடிநீர்த் தேக்கம் நிரம்பி வருவதால் எதிர்வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைகாலத்தில் பெய்த தொடர் மழையாலும், தற்போது தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையாலும், அனைத்து நீராதரங்களும், நீர்த் தேக்கங்களும்  நிரம்பி வருகின்றன, அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்துக் கொட்டுகின்றன,  கொடைக்கானலின் முக்கிய நீராதரமான தலைமை குடிநீர்த் தேக்கத்திலும் பெய்து வரும் தொடர் மழையால் நீர் வரத்து 14 அடியாக உயர்ந்துள்ளது, மழை தொடரும் பட்சத்தில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளதால் எதிர் வரும் காலங்களில் கொடைக்கானல் நகருக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

 

Fx16TV Logo