Fx16TV Logo

கனடா டோரன்டோவில், வேன் மோதி, பத்து பேர் பலி - தீவிரவாத தாக்குதலா?

NEWS / உலகம், TRENDING, TOP NEWS,

 

 

கனடா நாட்டில், டொரன்டோ நகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான, யாங்கி தெருவில், திங்கள் அன்று மதியம், நடைபாதையில் சென்றவர்கள் மீது, வேகமாக வந்த வேன் மோதியதால், பத்து பேர் கொல்லப்பட்டனர். பதினைந்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அலெக் மினாசியன் என்ற 25 வயது வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர், டொரன்டோவில் உள்ள ஒரு கல்லூரியில், கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

 

 

 

 

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், அவர் வேண்டுமென்றே நடைபாதையில் வண்டியை ஓட்டியதாகக் கூறுகின்றனர். கனடா நாட்டு அமைச்சர் ரால்ப், இதை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். இதன் பின்னால், தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. இந்தத் தாக்குதலுக்கு, கனடா பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கு, அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

People embrace as they lay candles and leave messages at a memorial for victims of a crash on Yonge St. at Finch Ave., after a van plowed into pedestrians on April 23, 2018 in Toronto, Canada.

 

அமைதியான நாடாக இருந்துவரும் கனடாவில், இதுபோன்ற தாக்குதல், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Fx16TV Logo