Fx16TV Logo

அமெரிக்க ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக தமிழக பெண் தேர்வு

NEWS / உலகம், TRENDING, Fx16News,

அமெரிக்க ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக தமிழக பெண் தேர்வு

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சக் ஸ்டீவன் உள்ளார். இந்த பதவியில், தற்போது ஜெனரல் மோட்டார்சின் கார்ப்பொரேட் நிதி பிரிவு துணை தலைவராக உள்ள திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்ட்டுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்கிறார் என, ஜெனரல் மோட்டார்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 39 வயதான திவ்யா சூர்யதேவரா சென்னையில் பிறந்து சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் எம்.காம் படித்து முடித்த இவர் அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்று 2005ம் ஆண்டு ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fx16TV Logo