Saturday, April 27th, 2024

ரோகித்தின் மாஸ் திட்டம் – உலககோப்பை பயிற்சி ஆட்டம் IND vs ENG

உலக கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் இந்திய அணி இங்கிலாந்துவை நாளை எதிர்கொள்ளுகிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று இங்கிலாந்து அணி முதலியனாக முடிவாகிறது. இங்கிலாந்து அணியில் பேட்டிங், பந்து வீச்சு, சுழற் பந்துவீச்சு போன்ற அனைத்துமே தாப் கிளாஸில் இருக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளை டி20 போல் விளையாடும் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் எப்படி விளையாடுவார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளலாம். இதனால் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துக்கு செல்லும் போது அது இந்திய அணி வீரர்களுக்கு மனதளவிலும் நல்ல உத்வேகத்தை உருவாக்கும். கவுஹாத்தி ஆடுகளம் பேட்டிங் உடைந்திருக்கும் என்பதால் நாளை ஆட்டத்தில் ரன் வேட்டை எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் அடிக்கப்படும் ஸ்கோர்கள் ஏதும் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக கருதப்படாது. மேலும் வீரர்களுக்கு பயிற்சி கிடைக்கும் வகையில் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஒன்று வழக்கம் போல் நாங்கள் 11 வீரர்களை தான் தேர்வு செய்து விளையாடுவோம் என்று கேப்டன் முடிவெடுக்கலாம். இல்லையெனில் பேட்டிங்களும் 11 பேரையும், பந்துவீச்சிலும் 11 பேரையும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் நாளை ஆட்டத்தில் ரோகித் சர்மா இரண்டாவது ஆப்ஷனை தான் தேர்வு செய்ய உள்ளார்.

நாளைய ஆட்டத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் களத்தில் இறங்கி பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்கள். இதேபோன்று பந்துவீச்சிலும் யார் யாருக்கெல்லாம் பந்து வீச ஆசையோ, அவர்களெல்லாம் நாளை ஆட்டத்தில் பந்து வீசி பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இதே போன்று ஒரு திட்டத்தை தான் இங்கிலாந்தும் கையில் எடுக்கும்.

இதனால் நாளைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். உலகக்கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணி அதனை வெற்றியுடன் எதிர்கொள்ள ஆசைப்படும். பிளேயிங் லெவனில் எந்த பேட்ஸ்மேன் பயன்படுத்தலாம் என கேப்டன் குழப்பத்தில் இருக்கும் பட்சத்தில் நாளைய ஆட்டம் அதற்கு தீர்வை கொடுக்கும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையில் இலவசமாக பார்க்கலாம்.